சாலை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம்

சேதுபாவாசத்திரம் அருகே சாலை வசதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2022-07-03 19:59 GMT
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள கொள்ளுக்காடு கீழத்தெருவில் வசிக்கும் மக்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக சாலை வசதியின்றி சிரமப்பட்டு வருகின்றனர். சாலை வசதி கேட்டு அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தநிலையில் கொள்ளுக்காடு கீழத்தெரு மக்களுக்கு சாலை வசதி கேட்டு அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே வளரும் தமிழகம் கட்சி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் எம்.ராஜபாளையம் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் கோட்டூர் சாமி, சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்பு செயலாளர் ஜெய விவேகானந்தன் கலந்து கொண்டு பேசினார். இதில், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளான கலந்து கொண்டனர். முடிவில் வினோத் நன்றி கூறினார்.





Tags:    

மேலும் செய்திகள்