வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது

Update: 2023-05-18 18:45 GMT


தரங்கம்பாடி தாலுகா இளையாளூர் ஊராட்சி புதுத்தெருவை சேர்ந்த 100 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் வீரசெல்வம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சங்கர், மேனகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அமைப்பின் மாநில இணை பொது செயலாளர் வக்கீல் பாரதி, மாநில துணைத்தலைவர் சண்முகவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, இளையாளூர் ஊராட்சியில் நீர்நிலைகள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் 100 குடும்பங்களுக்கு அரசு சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் உழைப்போர் உரிமை இயக்கம் நிர்வாகிகள் மற்றும் இளையாளூர் ஊராட்சி புதுத்தெரு பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தனித்தனியாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்