குடிநீர் வசதி கோரி ஆர்ப்பாட்டம்

குடிநீர் வசதி கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-09-27 18:45 GMT

பந்தலூர், 

சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட மில்லத் நகர் முதல் சேரம்பாடி சுங்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரங்களில் பொக்லைன் எந்திரம் மூலம் சீரமைக்கும் பணியின் போது, குடிநீர் குழாய்கள் சாலையோரங்களில் கிடக்கிறது. இதனால்11-வது வார்டுக்கு உட்பட்ட மண்ணாத்திவயல் குட்டன்கடவு, கோரஞ்சால் பகுதிகளில் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். இந்தநிலையில் நேற்று குடிநீர் குழாய்களை சீரமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்த கோரி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பு சார்பில் சேரம்பாடி பஜாரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துணை தலைவர் ஹைதர்அலி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சுங்கம் முதல் விளக்கலாடி பாலம் வரை தெருவிளக்குகள் பொருத்த வேண்டும். குடிநீர் குழாய்களை திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் அனிபா, சேரம்பாடி பகுதி பொதுசெயலாளர் ஆலி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்