மணல் குவாரிகளை மூட கோரி ஆர்ப்பாட்டம்

மணல் குவாரிகளை மூட கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-07-02 19:23 GMT

சமயபுரம், ஜூலை.3-

திருச்சி மாவட்டம் நொச்சியம், தாளக்குடி, கிளிக்கூடு உள்ளிட்ட பகுதிகளில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கு சட்டத்திற்கு புறம்பாக மணல் அள்ளப்படுவதாகவும், இதனால் நீர் ஆதாரம் பாதிக்கப்படுவதாகவும், எனவே மணல் குவாரிகளை மூட வேண்டும் என வலியுறுத்தி நேற்று சமயபுரம் நால் ரோட்டில் சாமானிய மக்கள் நல கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்