வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-23 19:08 GMT

தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலைக்கு பதிலாக 12 மணி நேர வேலைக்கான சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு தி.மு.க. கூட்டணி கட்சியினர் உள்பட எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வேலை நேரத்தை உயர்த்தும் சட்ட மசோதாவை கண்டித்தும், அந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் புதுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் அருண் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட தலைவர் மகாதீர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்