பெண்கள் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
தமிழ் மாநில பெண்கள் இயக்கம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தேனி பங்களாமேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது
தமிழ் மாநில பெண்கள் இயக்கம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தேனி பங்களாமேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. மணிப்பூரில் கலவரத்தை கட்டுப்படுத்தி அமைதியை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மணிப்பூர் மாநில பா.ஜ.க. அரசை கலைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு பெண்கள் இயக்க தலைவி சரிதா தலைமை தாங்கினார். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க துணைத்தலைவர் பாலபாரதி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில், மாதர் சங்க மாவட்ட துணைத்தலைவர் வெண்மணி, தேன்சுடர் பெண்கள் இயக்க ஆலோசகர் கருத்தம்மாள் மற்றும் பெண்கள் அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர்.