சேலத்தில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-06-20 21:11 GMT

சேலம்

தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத், கிராம பூசாரிகள் பேரவை ஆகியவை சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்ட செயலாளர் சபரிநாதன் தலைமை தாங்கினார். தலைவர் மஞ்சுசாமி முன்னிலை வகித்தார். இதில் விசுவ இந்து பரிஷத்தின் சேலம் மாவட்ட தலைவர் மற்றும் அவரது மனைவியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்து அமைப்பு பொறுப்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்