கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-04-28 20:44 GMT
  • ஓமலூரை அடுத்த தொளசம்பட்டி மானத்தாள் கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார், மணல் கடத்திய டிராக்டர் மற்றும் பொக்லைன் எந்திரத்தை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அப்போது சித்துராஜ் என்பவர், கிராம நிர்வாக அலுவலரை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஓமலூர் தாலுகா அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் சுரேஷ்குமார், வட்ட செயலாளர் சரவணன் மற்றும் காடையாம்பட்டி அலுவலர்கள், நில அளவைத்துறையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்