இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பழனியில் இஸ்லாமிய இயக்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-06-29 15:07 GMT

பழனி டவுன் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் பழனியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயில் ரவுண்டானா பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் தர்ம பரிபாலன சங்கம், பழனி தாலுகா ஜமாத், இஸ்லாமிய இயக்கம் மற்றும் இளைஞர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, நபிகள் நாயகத்தை அவதூறாக பேசிய நுபுர்சர்மா மற்றும் நவீன்ஜின்டால் ஆகியோரை கண்டித்தும், அவர்கள் 2 பேரையும் கைது செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென நுபுர்சர்மா, நவீன்ஜின்டால் ஆகியோரின் உருவபொம்மையை தீயிட்டு எரித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு ஏராமானோர் திரண்டதால், திண்டுக்கல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்