ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-12-15 18:45 GMT

திருவாரூர் விளமல் பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்தும் இடையூறாக உள்ள மதுக்கடைகளை இட மாற்றம் செய்ய வேண்டும். திருவாரூர் புதிய பஸ்நிலையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சுத்தரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

இதில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்