பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

ராதாபுரத்தில் பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-05-05 19:00 GMT

ராதாபுரம்:

ராதாபுரம் பஸ் நிலையம் முன்பு பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வள்ளியூர் வடக்கு ஒன்றிய தலைவர் ராஜேஷ் தலைமை தாங்கினார். ராதாபுரம் அருகே உள்ள கால்கரை கிராமத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு இடுகாட்டிற்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒன்றிய தலைவர்கள் அருள் ஜெகரூபர்ட், கேசவன், பொன்துரை, ஊடக பிரிவு மாவட்ட தலைவர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்