பாரதிய மின்தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்

முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி பாரதிய மின்தொழிலாளர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2022-06-28 17:58 GMT

மின்வாரிய ஊழியர்களின் எதிர்கால பாதுகாப்பை கருதி தமிழக அரசு உடனடியாக முத்தரப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தி பாரதிய மின் தொழிலாளர் சம்மேளனம் சார்பில் மயிலாடுதுறை கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை திட்ட பொருளாளர் ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார். நாகை திட்ட தலைவர் லெட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார். திட்ட செயலாளர் சதீஷ் வரவேற்றார். மாநில தலைவர் பழனி கலந்து கொண்டு பேசுகையில், மின்வாரிய ஊழியர்களின் ஊதிய உயர்வு, பஞ்சப்படி, கடன் மற்றும் புதிய நியமனங்கள் ஆகிய சலுகைகள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மின்வாரிய ஊழியர்களின் எதிர்கால பாதுகாப்பு கருதி தமிழக அரசு உடனடியாக முத்தரப்பு ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றார். இதில், பாரதிய மின்தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்