சீர்மரபினர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கம்பம், கூடலூரில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில், கம்பம் வடக்கு போலீஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில செயலாளர் கம்பம் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். மாநில வக்கீல் பிரிவு தலைவர் கவுதமன் கலந்து கொண்டு பேசினார். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும், மத்திய அரசு உத்தரவுப்படி டி.என்.டி. மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். டி.என்.டி. என்ற ஒற்றை சான்றிதழ் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முன்னதாக தேர்தல் பரப்புரையின் போது தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய ஆடியோவை ஒலிபரப்பு செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.
இதேபோல், சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில், கூடலூர் பழைய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில், நிர்வாகிகள் ராமர், தெய்வேந்திரன், லதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, டி.என்.டி. என்ற ஒற்றை சான்றிதழ் வழங்கக்கோரி கோஷங்களை எழுப்பினர்.