சின்னசேலத்தில் டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சின்னசேலத்தில் டேங்க் ஆபரேட்டர்கள், தூய்மை காவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-06-06 18:45 GMT

சின்னசேலம், 

தமிழ்நாடு கிராம மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் சின்னசேலத்தில் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மேல்நிலைகுடிநீர் தொட்டி இயக்குபவர்கள் சங்க ஒன்றிய தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.சின்னசேலம் ஒன்றிய நிர்வாகிகள் ராமச்சந்திரன், நேரு, குணசேகரன், லட்சுமி, கனிமொழி, ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் அண்ணாமலை வரவேற்றார்.

இதில் மாநில செயலாளர் ஏ.பி. கனி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மேல்நிலை குடிநீர் தொட்டி இயக்குபவர்களுக்கு குறைந்தபட்ச கூலி, சட்டப்படியான மாத சம்பளம் ரூ.13 ஆயிரத்து 848 வழங்கவும், ஊழியர்களுக்கு குழு காப்பீட்டு தொகையை மாதா மாதம் செலுத்தி ரசீதியை பணியாளர்களிடம் வழங்கிடவும், தூய்மை பணியாளர்களுக்கு நிலுவை ஊதியம், கொரோனா ஊக்கத் தொகையை உடனே வழங்கிட வேண்டும். தூய்மை காவலர்களுக்கு அரசு அறிவித்தபடி ரூபாய் 5 ஆயிரத்தை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் மாவட்ட தலைவர் ஜெய்சங்கர், மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் பழனிச்சாமி, அனைத்து ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய பொருளாளர் துக்கைமுத்து நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்