ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-30 18:30 GMT

தோகைமலை அலுவலகத்தில் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உதவி இயக்குனர்களுக்கு பதவி உயர்வு வழங்க ஆணை வெளியிட வேண்டும், ஊராட்சி செயலாளர்களின் காலியிடங்களை நிரப்ப வேண்டும், என்.ஆர்.இ.ஜி.எஸ். திட்டத்தின் கீழ் பணியாற்றும் கணினி இயக்குனர்களை நிரந்தர பணியமர்த்தவும், முழு சுகாதார நிலுவை கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக ஆர்்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்