ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் கலெக்டர் அலுவவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்நடத்தினர்.;
நாமக்கல் கலெக்டர் அலுவவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். சி.ஐடி.யு. மாவட்ட செயலாளர் வேலுசாமி, உதவி செயலாளர்கள் சுரேஷ், சிவராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்துவிளக்கிப் பேசினர்.
தொடர்ந்து நடந்தஆர்ப்பாட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தூய்மை பணி, குடிநீர் வழங்கல் பணி உள்பட பல்வேறு பணிகளை தனியார் மயமாக்கும் அரசாணைைய ரத்து செய்ய கோரியும், அனைவருக்கும் பொங்கல் போனஸ் வழங்க வலியுறுத்தியும், தூய்மை பணியாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.
கோரிக்கைகள்
மேலும் முன்கள பணியாளர்களுக்கு ஏற்கனவே அரசு அறிவித்தபடி ரூ.15 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும், ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளத்தை தாமதமின்றி வழங்க வேண்டும், மாதம்தோறும் 5-ந் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.