பன்றி வளர்ப்போர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்திற்கு இருந்து கேரளாவிற்கு பன்றிகளை கொண்டு செல்ல தடை விதித்து உள்ளதை கண்டித்து பன்றி வளர்ப்போர் சங்கத்தினர்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-11-29 18:45 GMT


தமிழகத்திற்கு இருந்து கேரளாவிற்கு பன்றிகளை கொண்டு செல்ல தடை விதித்து உள்ளதை கண்டித்து பன்றி வளர்ப்போர் சங்கத்தினர்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பன்றி வளர்ப்போர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கோவை, திருச்சி, குமரி, நெல்லை உள்பட பல்வேறு இடங்களில் பன்றி வளர்ப்பு பண்ணை உள்ளது.

இங்கு வளர்க்கப் படும் பன்றிகள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ கத்தில் இருந்து கேரளாவிற்கு பன்றிகள் கொண்டு செல்ல கேரள அரசு தடை விதித்து உள்ளது.

இதனால் தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பன்றிகளை கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

இதனால் கேரள அரசை கண்டித்து தமிழக பன்றி வளர்ப்போர் சங்கத்தினர் கோவை-கேரள எல்லையான க.க.சாவடியில் நேற்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மாநில செயலாளர் ஞானபிரகாஷ் தலைமை தாங்கினார். இதில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தடையை நீக்க வேண்டும்

இது குறித்து பன்றி வளர்ப்போர் சங்கத்தினர் கூறியதாவது:-

தமிழகத்தில் வளர்க்கப்படும் பன்றிகள் கேரளா கொண்டு செல் லப்பட்டு அங்கிருந்து 44 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த பன்றி இறைச்சிக்கு சான்றிதழ் அளிக்கும் மத்திய அரசின் நிறுவனமான எம்.பி.ஐ. கேரளாவில் தான் உள்ளது.

எனவே அவர்கள் சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே பன்றி இறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

ஆனால் தமிழகத்தில் இருந்து பன்றிகளை கொண்டு செல்ல கேரள அரசு கடந்த 6 மாதமாக தடை விதித்து உள்ளது.

இதனால் தமிழகத்தில் 200 டன்னுக்கு மேல் பன்றி இறைச்சி தேங்கும் நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு பன்றி கொண்டு செல்ல விதித்த தடையை கேரள அரசு நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்