உடற்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சையில், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-06-27 20:45 GMT

தஞ்சை பனகல் கட்டிடத்தில் உள்ள முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் மாநில பொருளாளர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், கள்ளப்பெரம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரை தாக்கியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு பள்ளிகளில் உரிய பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் மாநில அமைப்பு தலைவர் மதியழகன், மாநில அமைப்பு தலைவர் செந்தில்வேலன், மாவட்ட செயலாளர்கள் சாமிநாதன், அருள், மாரிஅய்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.







Tags:    

மேலும் செய்திகள்