தியாகி விஸ்வநாததாஸ் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் தியாகி விஸ்வநாததாஸ் முன்னேற்ற சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-09-05 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு தியாகி விஸ்வநாததாஸ் முன்னேற்ற சங்கத்தினர் தலைவர் சோலையப்பன் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

கோவில்பட்டி வ.உ.சி. நகர் 1-வது தெருவில் தனிநபர் வைத்துள்ள தங்களது சங்க கட்டிட சாவி மற்றும் ஆவணங்களை மீட்டுதரக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பாண்டியராஜ், சண்முகநாதன், முருகன், ரவிக்கண்ணன், சங்கர் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் கோரிக்கை மனுவை உதவி கலெக்டர் அலுவலகத்தில் சங்க நிர்வாகிகள் வழங்கி விட்டு கலைந்து ெசன்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்