இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-12-29 19:47 GMT

பெரம்பலூர்:

பெரம்பலூரில் புதிய பஸ் நிலையம் முன்பு நேற்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்ய வலியுறுத்தி, சென்னையில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்த சென்ற ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை கைது செய்த போலீசாரை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள், தமிழக கவர்னருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்