இந்து வியாபாரிகள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பழனியில் இந்து வியாபாரிகள் நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பழனி பஸ்நிலைய மயில் ரவுண்டானா அருகே இந்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜெகன், கவுரவ தலைவர் கந்தவிலாஸ் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சில வியாபாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளை கண்டித்தும், மின்சார கட்டணம், சொத்து வரி, தொழில்வரி உயர்வை கண்டித்தும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் இந்து வியாபாரிகள் நல சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.