சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை சுகாதார செவிலியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் இந்திரா தலைமை தாங்கினார். இதில் மாநில பொருளாளர் பாத்திமா மேரி, மாநில இணைச்செயலாளர் பத்மா, மாவட்ட துணைத்தலைவர் சாந்தி உள்ளிட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் சுகாதார செவிலியர் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பதவி பணியையும் சேர்த்து பார்த்திட வலியுறுத்தியும், அரசின் ஆணையை திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.