திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் தலைமை தபால் அலுவலகம் முன்பு திராவிடர் கழகம் சார்பில் சமூகநீதி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட இணை செயலாளர் காஞ்சித்துரை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் வீரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களை நீதிபதியாக நியமித்து, சமூகநீதியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.