நவம்பர் 26 சட்ட நாளில் பல்கலைக்கழகங்களில் வேதங்கள், இதிகாசங்கள் பற்றி கருத்தரங்கம் நடத்த சொல்லுவதாக மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழுவான யு.ஜி.சி.யை எதிர்த்து திராவிடர் கழகத்தின் மாணவர் கழகம் சார்பில் திருமருகல் பஸ் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல மாணவரணி செயலாளர் இளமாறன் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி செயலாளர் குட்டிமணி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை திராவிடர் கழக நாகை மாவட்ட தலைவர் நெப்போலியன் தொடங்கி வைத்தார். முன்னதாக மாவட்ட மாணவரணி தலைவர் பாக்கியராஜ் வரவேற்றார். இதில் நாகை மாவட்ட செயலாளர் புபேஸ்குப்தா, மண்டல இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.