மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-08-30 18:18 GMT

தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.சி.) திருப்பத்தூர் வட்டக்கிளை திருப்பத்தூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் எஸ்.தண்டபாணி, தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாநில துணைத் தலைவர் எஸ்.ஜோதி தொடங்கி வைத்து பேசினார். மாநில இணை செயலாளர் ஏங்கல்ஸ், வட்ட செயலாளர் கே.சந்திரசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் சிவசீலன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில ஊதிய உயர்வு நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க ரேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். பணி ஆட்களுக்கான இ-டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும், ஸ்மார்ட் மீட்டர் வைக்கும் திட்டத்திற்கு டெண்டர் அறிவிக்க உள்ளதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இறுதியில் திட்ட பொருளாளர் ஆர்.வெங்கடேசன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்