பா.ஜ.க.வினர் உண்டியல் ஏந்தி ஆர்ப்பாட்டம்

பா.ஜ.க.வினர் உண்டியல் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-09-06 18:17 GMT

கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே மாவட்ட பட்டியல் அணி பா.ஜ.க. சார்பில், தமிழ்நாட்டிற்கு பட்டியல் இனத்தவர்களின் நலனுக்காக மத்திய அரசு அனுப்பிய நிதியை சரியாக பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பிய மாநில அரசை கண்டித்து மாநில அரசுக்கு நிதி அனுப்பும் விதமாக பொதுமக்களிடம் உண்டியல் ஏந்தி வசூல் செய்து அந்த உண்டியலை மாநில அரசுக்கு அனுப்புவதாக கூறி உண்டியல் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் தகவல் அறிந்து ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக்ரஜினி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மாநில அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜ.க. பட்டியல் அணி கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயா உள்பட 18 பேர் மீது கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்