பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
முசிறியில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
முசிறி, ஜூலை.2-
திருச்சி புறநகர் மாவட்டத்தில் வழிப்பறி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை கட்டுப்படுத்த காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஏப்ரல் மாதம் 27-ந்தேதி இரவில் பேரூர் கிராமத்தில் இருந்து இந்திய ராணுவத்தில் பணிபுரியும் நீலமேகம் மனைவி கலைவாணிடமிருந்து கொள்ளையர்கள் சிலர் வீடு புகுந்து நகைகளை பறித்து சென்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல்துைறயை கண்டித்து முசிறி கைகாட்டியில் பா.ஜ.க.சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமை தாங்கினார். மாவட்ட மேற்பார்வையாளர் லோகநாதன் முன்னிலை வகித்தார். நகர மண்டல தலைவர் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் அனைவரையும் வரவேற்றார். இதில் கட்சியின் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைதலைவர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.