பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
வீரவநல்லூரில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேரன்மாதேவி:
வீரவநல்லூரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பா.ஜ.க சார்பில், வீரவநல்லூர் பஸ்நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேரன்மாதேவி மேற்கு மண்டல தலைவர் சிவராம கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் ராமராஜ் பாண்டியன், மங்கள சுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல பொது செயலாளர் இசக்கிமுத்து, மாவட்ட செயலாளர் வள்ளியம்மாள், மகளிர் அணி தலைவர் ஜெயசித்ரா, மாவட்ட ஐ.டி. விங் செயலாளர் சிவராஜ், மாவட்ட பட்டியல் அணி பொதுச் செயலாளர் மாரி செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.