அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் அனைத்திந்திய மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2023-09-12 19:30 GMT

சேலம் மாவட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் வைரமணி தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் ஞானசவுந்தரி, மாவட்ட துணைத்தலைவர் பரமேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் விவசாய தொழிலாளர்களுக்கு தனித்துறை தொடங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி அதற்கான கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பேரூராட்சி, நகராட்சிகளிலும் விரிவுபடுத்த வேண்டும். நிலம் இல்லாத விவசாய கூலி தொழிலாளர்கள், முறைசாரா தொழிலாளர்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்