மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஊட்டி
மின் கட்டண உயர்வை கண்டித்து ஊட்டியை அடுத்த மஞ்சூரில் நேற்று அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதற்கு மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், வரலாறு காணாத வகையில் சொத்து வரி உயர்த்தப்பட்டு உள்ளது. ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கே மிகவும் சிரமப்படுகின்றனர். தற்போது மின் கட்டணமும் உயர்ந்து உள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவையான பால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்துள்ளது. மேலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமைகள், போதை பொருட்கள் பழக்கம் அதிகரித்துள்ளது. இதை தடுக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றுக்கூறி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.