மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மின்கட்டண உயர்வை கண்டித்து நெல்லையில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லையில் மின்கட்டண உயர்வை கண்டித்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
வீட்டு வரி மற்றும் மின் கட்டணத்தை உயர்த்தி இருக்கும் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார். அ.தி.மு.க. சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை, மாநில அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
கண்டன கோஷம்
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், வீட்டுவரி, மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினார்கள்.
இதில் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆர்.பி.ஆதித்தன், ரெட்டியார்பட்டி நாராயணன், அமைப்பு செயலாளர்கருப்பசாமி பாண்டியன், முன்னாள் எம்.பி. முத்துக்கருப்பன், கொள்கை பரப்பு துணை செயலாளர் பாப்புலர் முத்தையா, எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் நாராயணபெருமாள், எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் கல்லூர் வேலாயுதம், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் ஜெரால்டு, பொருளாளர் சவுந்தரராஜன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் பெரியபெருமாள், துணை செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, மாநகர பகுதி செயலாளர் வக்கீல் ஜெனி, ஒன்றிய செயலாளர்கள் கே.பி.கே.செல்வராஜ் (ராதாபுரம் கிழக்கு), அந்தோணி அமலராஜா (மேற்கு), முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், எஸ்.கே.எம்.சிவகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.