கனல் கண்ணன் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரத்தில் இந்து முன்னணி சார்பில் கனல் கண்ணன் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற 44 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரத்தில் இந்து முன்னணி சார்பில் கனல் கண்ணன் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற 44 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்
இந்து முன்னணி கலை கலாசார பொறுப்பாளரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் பெரியார் சிலை தொடர்பாக பேசியதை தொடர்ந்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து இந்து முன்னணி சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவை நடைபெற்றது. இதன்படி ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி சார்பில் அரண்மனை பகுதியில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி தரவில்லை.
இந்நிலையில் தடையை மீறி நேற்று காலை இந்து முன்னணி அமைப்பினர் அரண்மனை பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். கனல் கண்ணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்ய திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனை தொடர்ந்து அனைவரும் அரண்மனை பகுதியில் தடையை மீறி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கைது
இதில் மாநில பேச்சாளர்கள் கங்காதரன், ரத்தினசபாபதி, மாவட்ட செயலாளர் சக்திவேல், வீரபாண்டி, சேர்மன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் காலிஸ், நகர் தலைவர் பாலமுருகன், ஒன்றிய தலைவர்கள் கார்த்தி, திருவருட்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 44 பேரை போலீசார் கைது செய்தனர்.