காகித ஆலை தொழிற்சங்க தேர்தலை தள்ளி வைத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
காகித ஆலை தொழிற்சங்க தேர்தலை தள்ளி வைத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
புகழூர் காகித ஆலை 2-வது கேட் முன்பு நேற்று புகழூர் காகித ஆலை தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க கவுரவத் தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மீண்டும் தொழிற்சங்க தேர்தலை தள்ளி வைத்ததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ெதாழிற் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.