மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-20 19:00 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் இருந்து பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கரூர் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழக அரசு உடனடியாக மின் கட்டண உயர்வை திரும்பபெற வேண்டும் என கோஷமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்