மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்
காரைக்குடி அருகே கல்லல் யூனியன் அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு யூனியன் ஆணையாளரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர். இதில் சாத்தனூர் கிராம இணைப்பு சாலை கடந்த 20 ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் உள்ளது. எனவே அந்த பகுதியில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும். கண்டரமாணிக்கம் முதல் கல்லல் வரை குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும். கல்லல் முதல் ஊகம்பட்டி வரையும், ஆத்தங்குடி-பலவான்குடி குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து புதிய தார்சாலை அமைக்க வேண்டும், கல்லல் ஒன்றியம் முழுவதும் பழுதான கிராம சாலைகளை தரமான சாலையாக அமைக்க வேண்டும், திருப்பத்தூர் முதல் காளையார்கோவில் வரையும், கண்டரமாணிக்கம், கள்ளிப்பட்டு, புரண்டி வழியாக புதிய பஸ் வழித்தடத்தை தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.