இளையான்குடி
இளையான்குடி யூனியன் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கவும், சம்பளம் கிடைப்பதில் உள்ள குறைபாடுகளை சரி செய்யவும், புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதில் உள்ள குறைபாடுகளை களையவும், மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். மேலும் இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் மனு அளித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.