ஆர்ப்பாட்டம்
இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில், தேனி பழைய பஸ் நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில், தேனி பழைய பஸ் நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் அழகேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின்போது, சென்னை கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் தலைவர் பத்மாவதி, மாநில செயலாளர் மஞ்சுளா உள்பட 21 பேர் மீது பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.