மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
சிவகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகிரி:
சிவகிரி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக சிவகிரி பஸ் நிலையம் அருகே காந்தி கலையரங்கம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ஜ.க. அரசின் பொருளாதார கொள்கைகளை கண்டித்தும், கம்யூனிஸ்டு இயக்கம் குறித்து நாம் தமிழர் கட்சியினரின் அவதூறான பேச்சைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வாசுதேவநல்லூர் ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் சுகந்தி தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அசோக்ராஜ், அமல்ராஜ், சிவசுப்பிரமணியன், சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.