ஆர்ப்பாட்டம்

எஸ்.புதூர் பஸ் நிறுத்தம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக அகிம்சை வழி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-04-06 18:45 GMT

எஸ்.புதூர்

எஸ்.புதூர் பஸ் நிறுத்தம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக அகிம்சை வழி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் எஸ்.புதூர் வட்டார தலைவர் தேனன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் ராகுல் காந்தி எம்.பி. பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் எஸ்.புதூர் ஒன்றிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்