பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-30 18:45 GMT

சுகாதார ஆய்வாளர் நிலை-1 பதவி உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும். சுமார் 9 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை-2 காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்கத்தினர் நேற்று சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முருகேசன் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது தகுதியுள்ள அனைவருக்கும் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்