காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி நில அளவையர்கள் ஆர்ப்பாட்டம்
காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி நில அளவையர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம் மாவட்ட நில அளவை அலுவலர்கள் யூனியன் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கடாசலம், பொருளாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர் முருகேசன் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
இதில் களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். நில அளவர்கள் முதல் உதவி இயக்குனர்கள் வரை நிலுவை மனுக்களை காரணம் காண்பித்து எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள பயணப்படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.