விருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு தமிழர் கழகம் கட்சியின் சார்பில் அருப்புக்கோட்டை தாலுகா ராஜகோபாலபுரம் பகுதியில் பட்டியலின மக்களின் மீது நடந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில அமைப்பு செயலாளர் இப்ராகிம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், தமிழர் கழகம் கட்சியின் மாநில தலைவர் தமிழ்செல்வனும் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.