ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் யூனியன் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் குருநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் கருப்பசாமி வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட செயலாளர் முருகேசன் விளக்க உரையாற்றினார். இதில், சங்க நிர்வாகி சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில கவுரவ தலைவர் பரமேஸ்வரன் நிறைவுரையாற்றினார். முடிவில் மாவட்ட துணை செயலாளர் மாறன் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது ஒழுங்கு நடவடிக்கை நிலுவைகள், லஞ்ச ஒழிப்புத்துறை புகார் மனு தொடர்பான அனைத்து விசாரணைகளையும் காலவரையறைக்குள் முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.