ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-11-25 20:31 GMT

சாத்தூர்,

சாத்தூர் நகராட்சியையும், நெடுஞ்சாலை துறையும் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர் குழு உறுப்பினர் நாகராஜன் தலைமை தாங்கினார். நகர்குழு உறுப்பினர் ராணி முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பாதாள சாக்கடை பணிகளை நிறைவு செய்ய கோரியும், சாத்தூர் மெயின் ரோடு, வெம்பக்கோட்டை ரோடு, வெள்ளக்கரை ரோடு, 24 வார்டுகளில் தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சரி செய்ய கோரியும் ேகாஷங்கள் எழுப்பினர். இதில் நகர செயலாளர் பெத்தராஜ், மாவட்ட குழு உறுப்பினர் விஜயகுமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் லட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்