தேவகோட்டையில் மாவட்ட கல்வி அலுவலகத்தை மீண்டும் தொடங்க வலியுறுத்தி 14-ந் தேதி ஆர்ப்பாட்டம்

தேவகோட்டையில் மாவட்ட கல்வி அலுவலகத்தை மீண்டும் தொடங்க வலியுறுத்தி 14-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

Update: 2022-11-11 18:45 GMT

தேவகோட்டையில் மாவட்ட கல்வி அலுவலகத்தை மீண்டும் தொடங்க வலியுறுத்தி 14-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

கூட்டம்

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட உயர்மட்டக்குழு கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயலாளருமான நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செயலாளர் முத்துசாமி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொறுப்பாளர் வினோத்குமார், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் பீட்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அகில இந்திய முடிவுகளை இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயலாளருமான சங்கர் விளக்கி பேசினார். கூட்டத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணை தலைவர் சுரேஷ் கண்ணா, ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, திருப்பத்தூர் கல்வி மாவட்ட செயலாளர் சிங்கராயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம்

தேவகோட்டையில் பல வருடமாக செயல்பட்டு வந்த மாவட்ட கல்வி அலுவலகத்தை (இடைநிலை கல்வி) மீண்டும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும், மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உடனடியாக அக்டோபர் மாத ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 14-ந் தேதி சிவகங்கை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும், அகில இந்திய முடிவுகளை தமிழகத்தில் அமல்படுத்தும் வகையில் புதிய பென்ஷன் திட்டத்தை ஒழித்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய தேசிய கல்வி கொள்கை 2020-ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 26-ந் தேதி திருப்பத்தூர், காரைக்குடி, காளையார் கோவில், மானாமதுரை உள்ளிட்ட நான்கு முனைகளில் இருந்து இருசக்கர வாகன பிரசார பயணம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்