ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-11-03 18:45 GMT

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்து ஓய்வூதியர்களுக்கும் மருத்துவ காப்பீடு திட்டம் குறைபாடு இல்லாமல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் செல்வம் வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் குப்புசாமி, மத்திய, மாநில ஒருங்கிணைப்புகுழுவின் மாவட்ட தலைவர் ராமசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும். நிறுத்தப்பட்ட ரெயில் பயண கட்டண சலுகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்