இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

நாமக்கல்லில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-10-27 19:00 GMT

மத்திய அரசு இந்தி திணிப்பு முயற்சியை கைவிட வேண்டும். மருத்துவம் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சரவணன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசின் தேர்வாணையத்தின் கேள்வி தாள்களில் மாநில மொழிகளும் இடம்பெற வேண்டும். அரசியல் சாசனத்தின் 8-வது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் மத்திய அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்