ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சிவகங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் வீரபாண்டி சென்னையில் தாக்கப்பட்டதை கண்டித்து சிவகங்கை அரண்மனை வாசலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகரச் செயலாளர் வக்கீல்.மருது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயலாளர் கண்ணகி, மாவட்ட துணைச்செயலாளர்கள் சாத்தையா கோபால் மற்றும் நகர துணைச் செயலாளர்கள் சகாயம், பாண்டி, கங்கை சேகரன், ஒன்றிய செயலாளர் சின்ன கருப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.