சேலத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

சேலத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-08-23 23:15 GMT

சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்க மாவட்ட தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் ஜான் ஆஸ்டின் முன்னிலை வகித்தார். மாநில துணை தலைவர் திருவரங்கன் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதில் ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வழங்க வேண்டும். 25 ஊராட்சிகளை உள்ளடக்கி, ஊராட்சி ஒன்றியங்கள் உருவாக்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்