டாஸ்மாக் தொ.மு.ச.வினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் தொ.மு.ச.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவை தி.மு.க. எம்.பி.க்களை சஸ்பெண்ட் செய்ததற்கு மத்திய அரசை கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்ட டாஸ்மாக் அலுவலகம் எதிரில் நேற்று தொ.மு.ச. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தார். இதில் மாநில செயலாளர் சஞ்சீவன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் நிர்வாகிகள் வேல்முருகன், சிவக்குமார், பழனிவேல், முருகன் மற்றும் தொ.மு.ச உறுப்பினர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். முடிவில் அண்ணாதுரை நன்றி கூறினார்.